Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கொடுமைப்படுத்திய மனைவியிடம் விவாகரத்து கேட்டவருக்கு விடுதலை

கொடுமைப்படுத்திய மனைவியிடம் விவாகரத்து கேட்டவருக்கு விடுதலை

கொடுமைப்படுத்திய மனைவியிடம் விவாகரத்து கேட்டவருக்கு விடுதலை

கொடுமைப்படுத்திய மனைவியிடம் விவாகரத்து கேட்டவருக்கு விடுதலை

ADDED : மே 05, 2010 01:02 AM


Google News

மும்பை : திருமணமான நாளிலிருந்து, மனைவியிடம் துன்பத்தை மட்டுமே அனுபவித்த கணவருக்கு, விவாகரத்து மூலம் விடுதலை அளித்துள்ளது குடும்ப நல கோர்ட்.



மும்பையை சேர்ந்த நகை தொழிலாளி ஒருவருக்கு, 1989ல் திருமணம் நடந்தது.

திருமணத்துக்கு முன்பே, "என் சம்பாத்தியம் வெறும் ஆயிரத்து 400 ரூபாய் தான். ஒரு சிறிய அறையில், என் பெற்றோருடன் சேர்ந்து தான், குடித்தனம் நடத்த வேண்டியிருக்கும்' என, மனைவியிடம் சொல்லியிருந்தார். முதலில் தலையாட்டிய மனைவி, பின்பு கணவன் வீடு மிகவும் சிறியதாக உள்ளதாக குறை கூறினார். இந்த காரணத்துக்காக, திருமணமான அதே ஆண்டு ஜூன் மாதம் தாய்வீடு சென்றவர், மீண்டும் கணவன் வீட்டை மிதிக்கவில்லை. பலமுறை அழைத்தும் மனைவி வராத காரணத்தால், விவாகரத்து கோரினார் நகை தொழிலாளி. கடந்த 2004ம் ஆண்டு, குடும்ப கோர்ட் இவர்களுக்கு விவாகரத்து வழங்கியது. இதை எதிர்த்து மனைவி, மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.



அந்த வழக்கில், கணவர் தன் மனுவில்,"திருமணமான நாளிலிருந்தே தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என, என் மனைவி நச்சரித்தார். எனது பொருளாதார நிலை பலவீனமாக இருந்ததை சொல்லி, அடிக்கடி குத்திக் காட்டினார்' என, குறிப்பிட்டிருந்தார். வழக்கை விசாரித்த கோர்ட், மனைவி கணவருடன் பல ஆண்டுகளாக சேர்ந்து வாழாமல் கைவிட்டதும், கொடுமைப்படுத்தியதும், சேர்ந்து வாழ மறுத்ததும் உறுதிபடுத்தப்பட்டதால், மனைவியின் மனுவை தள்ளுபடி செய்து விட்டது. இதையடுத்து, ஜீவனாம்ச தொகையை, 25 ஆயிரமாக உயர்த்தி தரும்படி மனைவி கேட்டார். ஆனால், கணவர் குறைந்த சம்பளத்தில் வேலை பார்ப்பதால், மாதம் 1,800 ஜீவனாம்சமும், பெண் குழந்தையை பராமரிக்க 2,000 ரூபாய் அளிக்கும் படியும், கணவருக்கு கோர்ட் உத்தரவிட்டது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us